Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 21 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
காங்கேசன்துறை துறைமுகத்தின் முதல்கட்ட அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலரை (2.2 பில்லியன் இலங்கை ரூபா) வழங்கவுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று அறிவித்தது.
தொடர்ந்தும் இந்த துறைமுக அபிவிருத்திக்காகவும் வட மாகாணத்தின் வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் நன்கொடைகள், சலுகைக் கடன்கள் என பல வழிகளிலும் உதவ உள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது.
இது தொடர்பான ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் இன்று கைச்சாத்திட்டுள்ளன.
துறைமுகத்தில் நீரில் மூழ்கியுள்ள ஆறு கப்பல்களை மீட்டெடுத்தல், அலைத்தடை அணையினை மறுசீரமைத்தல் போன்ற விடயங்களில் இந்தியா முதலீடு செய்யும் என இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த துறைமுக அபிவிருத்தி, இலங்கையின் புனர்நிர்மான வேலைகளை துரிதப்படுத்தி வடக்கில் வழமை நிலையை கொண்டுவரவும், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் பங்களிப்பு செய்யும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா கூறினார்.
காங்கேசன்துறை துறைமுகம் இரண்டு கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படும். அபிவிருத்தி வேலை பூர்த்தியாகும்போது அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களையும் வேறு உற்பத்திப் பொருட்களையும் யாழ்ப்பாணத்துக்கு கடல் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இதனால் இப்பிராந்தியத்தில் நுகர்வுப் பொருட்களை குறைந்த விலையில் தாராளமாக பெறக்கூடியதாக இருக்கும் என துறைமுக, பெருந்தெருக்கள் அமைச்சு அதிகாரிகள் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago