Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 2012ஆம் ஆண்டில் விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று யாழ். மாவட்ட செயலாளர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யாழில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் புத்தளத்தில் வீடு வளவுகளோடு வாழ்ந்து விட்டு இங்கு வந்துள்ளனர். அவர்களின் வீட்டுத் தேவைகளைக் கருத்திற்கொண்டு காணி உரித்து இருந்தால் அக்காணிகளிலேயே வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளில் மனிதாபிமானத்துடன் சில விடயங்களை செய்து கொடுத்துள்ளதாகவும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து செயற்படுத்துவதற்கு விசேட செயற்திட்ட கருமபீடம் செயற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
suthan Saturday, 31 December 2011 03:17 AM
நல்லது செய்றதுக்கு காலம் நேரம் எல்லாம் எதுக்கு அதை உடனே செய்யுங்க அம்மா ......
Reply : 0 0
safan Saturday, 31 December 2011 02:57 PM
ஏதோ வாயால சொல்லறதெல்லாம் இலகுவான காரியம் தான். பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
Reply : 0 0
Mubeen Thursday, 05 January 2012 01:41 AM
வாழ்ழ்க இமெல்டா மேடம் ,
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
34 minute ago
1 hours ago
4 hours ago