Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 05 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
உலகளாவிய ரீதியில் சர்வதேச கண்ணழுத்த வாரம் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு தேசிய நிகழ்வு எதிர்வரும் 13ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது
இந் நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பல கண் வைத்திய நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். சர்வதேச கண்ணழுத்த வாரத்தை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் கண்ணழுத்த நோயை கண்டறிவதற்கான பரிசோதனை நிகழ்ச்சித் திட்டமொன்று 'பார்வை 2020' திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை 2000 பொது மக்களை இவ்விசேட நிகழ்ச்சித் திட்டத்தில் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கியமாக நீரிழிவு நோயுள்ளவர்களும், குடும்பத்தில் கண்ணழுத்த நோய் பிரச்சினை உள்ளவர்களும், 40 வயதுக்கு மேற்பட்ட பொது மக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு தம்மைப் பரிசோதித்துக் கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
1 hours ago
3 hours ago