Kogilavani / 2012 ஜனவரி 02 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழில் எதிர்வரும் 11 ஆம் திகதி தைத்திருநாள் விழா நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
கலை, கலாசார, சமூகப் பாரம்பரியங்களைப் பறைசாற்றும் 'தைத் திருநாள் விழா 2012' நிகழ்வில் நடைபெறவுள்ள போட்டிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
யாழ். மாநகரசபை அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த விழாவில் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான விபரங்கள் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 11ஆம் திகதி முதல் 15 வரையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், விளையாட்டுப் போட்டிகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், கலைத்திறன்சார் போட்டிகள், கலாசாரப் போட்டிகள் என பல்வேறு போடிட்டிகளும், கலை நிகழ்ச்சிகள், களியாட்ட நிகழ்வுகள், நுகர்வோர் சந்தை என்பனவும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
விளையாட்டுப் போட்டிகளாக, மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான முச்சக்கரவண்டிப் போட்டி, படகோட்டும் போட்டி, வள்ளந்தாங்கல் போட்டி, நீச்சல் போட்டி என்பன நடைபெறவுள்ளன.
இவற்றுடன், பாரம்பறிய விளையாட்டு போட்டிகளும் நடைபெறவுள்ளன.
கலைத்திறன்சார் போட்டிகளாக தனி பாடல் போட்டியும், தனி நடனப் போட்டியும் நடைபெறவிருப்பதுடன், கலாசாரம் சார்ந்த போட்டிகளாக, தமிழன், தமிழச்சி போட்டி, பொங்கல் வைத்தல் போட்டி, ஊர்திப் போட்டி என்பன நடைபெறவிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் தமிழர்களின் கலை, கலாசார, பாரம்பரியங்களையும், அந்தந்தப் பிரதேசங்களின் சிறப்பு அம்சங்களையும் வெளிப்படுத்தும் ஊர்திகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவிருப்பதாக இங்கே தெரிவிக்கப்பட்டது.
இந்த ஊர்திகள் விழாவில் இறுதி மூன்று நாட்களும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பவனி வரும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் ஆண், பெண் இருபாலாரும், யாழ் மாநகரசபை கலாசாரப் பிரிவில் போட்டி விண்ணப்பப் படிவங்களை 100 ரூபா செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் எனவும், விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதி 2012 ஜனவரி 12ம் திகதி எனவும் ஏற்பாட்டாளர்கள் சார்பில் இங்கு அறிவிக்கப்பட்டது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago