2025 மே 17, சனிக்கிழமை

இரு மனைவிகளின் சண்டையால் 26 வயது நபர் தற்கொலை

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம், அளவெட்டிப் பகுதியில் தனது இரு மனைவிகளுக்கு இடையில் இடம்பெற்ற  சண்டையை  பொறுக்கமுடியாத கணவன் தற்கொலை செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு அளவெட்டியைச் சேர்ந்த இரண்டு பெண்களை மணமுடித்து அவர்களோடு குடும்பம் நடத்தி வந்த  துரைராசா சந்திரமோகன் (வயது 28) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார்.

இவரின் 20 வயதான முதல் மனைவிக்கு 3 பிள்ளைகளும் 18 வயதான இரண்டாவது மனைவிக்கு ஒரு பிள்ளையும் உள்ளனர்.  இந்த இரு மனைவிகளுக்கும் இடையில் அடிக்கடி சண்டை இடம்பெறுவதால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .