2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீசபாரத்தினத்தின் 26ஆம் ஆண்டு நினைவுதினம்

Suganthini Ratnam   / 2012 மே 06 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

முன்னாள் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் ஸ்ரீசபாரத்தினத்தின் 26ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

கோண்டாவில் வடக்கில் ஸ்ரீரெலோ அமைப்பின் யாழ.; மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.செந்தூரன் தலைமையில் இந்நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்ரீரெலோ அமைப்பின் தலைவர் ப.உதயராசா திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றிவைத்து மலர் மாலை அணிவித்;தார். இதனைத் தொடர்ந்து அமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் திருவுருவப்படத்திற்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
நினைவஞ்சலிக் கூட்டம் யாழ். மாவட்ட அமைப்பாளர் தலைமையில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .