2025 மே 21, புதன்கிழமை

யாழ்ப்பாணத்திற்கு 28 புத்தர் சிலைகள் எடுத்துவரப்பட்டன

Suganthini Ratnam   / 2011 மே 22 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

2600ஆவது சம்புத்தத்வ ஜயந்தியை முன்னிட்டு 28 புத்தர் சிலைகள் வடபகுதிக்கு எடுத்துவரப்பட்டுள்ளன. இவைகள் படைத்தரப்பினரால் வடபகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள விகாரைகளில் வைக்கப்படவுள்ளன.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட வடபகுதியில் படைத்தரப்பினரால் பெரும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வடபகுதிக்கு எடுத்துவரப்பட்ட 28 புத்தர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பலாலி படைத் தலைமையகத்தில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டதுடன், புதிதாக வெள்ளரச மரக்கன்றுகளும் நடப்பட்டன. இப்புத்தர் சிலைகள் படைத் தரப்பினரால் பலாலி படைத் தலைமையகத்தைச் சுற்றி புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள விகாரைகளில் வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெசாக் தினத்தன்று ஒட்டிசுட்டானில் புதிதாக ஒரு புத்த விகாரை அமைக்கப்பட்டு அங்கு வெள்ளரச மரக்கன்றும் நடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .