2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இந்திய அரசின் வீட்டுத்திட்டப்பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பம்

Super User   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சங்கவி)
இந்திய அரசின் வீட்டுத்திட்டப்பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

முதற்கட்ட ஆரம்ப வேலைகள் அரியாலை நாவலடியில் இடம்பெறவுள்ளன என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

யாழ். செயலகத்தில் இவ்விடயம் தொடர்பாக இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ். செயலக திட்டப்பணிப்பாளர் ம. பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியும் கலந்துகொண்டார்.

இந்திய அரசின் வீட்டுத்திட்டப் பணிகளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இந்த வகையில் யாழ். மாவட்டத்தில் முதற்கட்டமாக 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதில் காரைநகர் உதவி அரச அதிபர் பிரிவில் 30, யாழ். பிரதேச செயலர் பிரிவில் 40, நல்லூர் பிரதேசசெயலர் பிரிவில் 50, தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 30 என்ற வகையில் வீடுகள் முதற்கட்டமாக அமைக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 250 வீடுகள் முதற்கட்டமாக அமைக்கப்படவுள்ளன என்றும் ஒவ்வொரு வீடுகளும் தலா 6 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X