2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடப் பணிகள் பூர்த்தி; 29இல் நிர்வாகத்திடம் கையளிப்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்,ரஜனி)


ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடப் பணிகள் பூர்த்தியான நிலையில், எதிர்வரும் 29ஆம் திகதி  வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக ஜப்பானின் இலங்கைக்கான வதிவிடப் பொறியியலாளர் ஸ்வோர் என்டோ இன்று தெரிவித்தார்.

ஜப்பான் அரசாங்கத்தின் 2.9 பில்லியன் நிதியுதவியில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தகாலம் எதிர்வரும் 29ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. சில வேலைகள் மேற்கொள்ளவேண்டியுள்ளதால் அதற்கான பணிகள் தற்போது நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 29ஆம் திகதி வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ள இப்புதிய கட்டிடத்தை யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.

இப்புதிய கட்டிடத்தொகுதியில் கதிரியக்கப் பிரிவு, ஈ.சி.ஜி, சத்திரசிகிச்சைக்கூடம் ஆகியன உள்ளடங்குவதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் இக்கட்டிடத்தொகுதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் பவானந்தராஜா கூறினார். படங்கள்:- எஸ்.கே.பிரசாத்





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X