2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் கடந்த ஒரு வாரத்தில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்ட்ட 29 பேர் கைது

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                  (எஸ்.கே.பிரசாத், ஜெ.டானியல்)
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர்  சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சட்டவிரோதமான மது விற்பனை தொடர்பாக 5 வழக்குகளும், கஞ்சா விற்பனை தொடர்பில் ஒரு வழக்கும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 7 வழக்குகளும், பொது இடத்தில் மதுபாவனை தொடர்பாக 7 வழக்குகளும், சூழல் மாசடைவை எற்படுத்தியமை தொடர்பாக 11 வழக்குகளும் ஏனைய குற்றங்களுக்காக 5 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணம், ஊரெழு பொக்கணை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி வட்டக்கச்சியைச் சேர்ந்த முருகேசு சிவராசா (வயது 45) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலம் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டிகள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக அதிகளவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரகர தெரிவித்தார்.

கொக்குவில் பகுதியில் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு அதிகரித்துள்ளது. அத்தோடு துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டமை தொடர்பில் ஒரு நாளைக்கு 10க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X