Menaka Mookandi / 2011 மே 20 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் பஸ் பயணிகளின் பணப்பைகளைத் திருடிவந்த மூன்று பெண் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ள பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை அடுத்து அவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றை பளை, இயக்கச்சிப் பகுதியில் வைத்து மறித்து அதில் பயணம் செய்துள்ள மேற்படி மூன்று பெண்களும் அதே பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பைக்குள்ளிருந்த 20ஆயிரம் ரூபாவினைக் கொள்ளையிட்டுள்ளனர்.
பணத்தைக் கொள்ளையடித்த பின்னர் மூன்று பெண்களும் பஸ்ஸிலிருந்து இறங்கும் போது அவர்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து தனது கைப்பையினைச் சோதனையிட்டுள்ளார். இந்நிலையில் தனது கைப்பைக்குள் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை அறிந்த அவர் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலின் போது மேற்படி மூன்று பெண்களும் முல்லைத்தீவு பஸ் ஒன்றில் ஏற முற்பட்டவேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், வவுனியா, பூந்தோட்டம் மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 21 முதல் 45 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவர்களை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சிவகுமார் உத்தரவு பிறப்பித்தார்.
16 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago