2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பஸ்ஸில் திருடிய 3 பெண்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கொடிகாமம் தனியார் பஸ்ஸில் பயணிகளிடம் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள்  சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொடிகாமத்திலிருந்து யாழ். நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றில் பயணம் செய்த மேற்படி மூன்று பெண்களும் இன்னொரு பெண்ணின் கைப்பையைப் பிளேற்றினால் வெட்டி உள்ளிருந்த சிறுதொகைப் பணத்தை அபகரித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X