Super User / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
2010 ஆம் ஆண்டுக்கான யாழ். மாவட்ட வாக்காளர் பட்டியலிலிருந்து 300,000 பேரின் பெயர்களை தேர்தல் அதிகாரிகள் நீக்கியுள்ளனர். யுத்தகாலத்தில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால் இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய மதிப்பீட்டின்படி யாழ் மாவட்டத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 5 லட்சமாக இருக்கும். எனினும் யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் வாக்காளர்களின் கணக்கெடுப்புகள் இன்னும் பூர்த்தியாகவில்லை.
வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் நாட்டிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் நிரந்தர வசிப்பாளர்களாக அல்லது பிரஜைகளாக உள்ளனர் என யாழ் மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் பி.குகநாதன் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
'அவ்வாக்காளர்களில் சிலர் ஒரு தசாப்த காலத்திற்கு முன்னர் சென்று விட்டனர். ஆனால் அவர்களின் பெயர்கள் தொடர்ந்தும் வருடாந்த வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. அத்துடன் சிலர் யாழ் மாவட்டத்திற்கு வெளியே வசிக்கின்றனர் ' என அவர் கூறினார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் பொதுமக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் காட்சிக்கு வைக்கப்படும். அதன்பின் மேற்படி வாக்களார்களின் உறவினர்கள் விரும்பினால் மேன் முறையீடு செய்யலாம். இறுதிப்பட்டியல் ஏப்ரல் மாதமே வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைவதால் யாழ் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் குறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது யாழ் மாவட்டத்திலிருந்து 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025