2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

'ஒரு கிராமம், ஒரு வீடு' கடனாளிகளுக்காக ரூ.30 மில்லியன் வங்கியில் வைப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் 'ஒரு வீடு, ஒரு கிராமம்' என்ற வீட்டுத்திட்டத்திற்காக யாழ். மாவட்டத்தில் 30 மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ். மாவட்ட  முகாமையாளர் நோயல் ஜெயசந்திரன் இன்று  தெரிவித்தார்;.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ஸவினால் யாழ். மாவட்டத்திற்கு விசேடமாக ஒதுக்கப்பட்ட 40 மில்லியன் ரூபாவில் இருந்தே வீட்டுத்திட்ட கடன் உதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்காக முதல்க் கட்டமாக வங்கியில் இந்தத் தொகை வைப்பில் இடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  இதன் அடிப்படையில் 30 புதிய வீடுகளை  நிர்மாணிப்பதற்கு 14.9 மில்லியன் ரூபா நிதியும் 37 வீடுகளை தரம் உயர்த்துவதற்கு 15.1 மில்லியன் ரூபாவும்  வங்கியில் வைப்பில் இடப்பட்டுள்ளது.

வீட்டுக் கடன் விண்ணப்பதாரிகள் தமது வேலைகளை நிறைவுக்கு கொண்டுவரும் பட்சத்தில் இரண்டாம் கட்டம்,   மூன்றாம் கட்டக்  கடன் உதவிகள் வழங்கப்படும்.

இந்த வீட்டுக் கடன் திட்டத்தில் புதிய வீடுகள் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X