2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் 30 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். அனலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக்  கூறப்படும் இந்திய மீனவர்கள் 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளடன், இவர்களிடமிருந்து 8 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை கரையோர காவல் படையினரும்  கடற்படையினரும் இணைந்து  மேற்படி இந்திய மீனவர்கள் 30 பேரையும் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

எட்டு ரோலர்  படகுகளில் வந்த இந்தியாவின் ஜனதாப் பட்டிணத்தையும் கோட்டைப் பட்டிணத்தையும் சேர்ந்த  மீனவர்கள் 30 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஷ்கண்ணா தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 30 பேரும்  காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .