2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இம்மாதம் பிறந்த 30 குழந்தைகளுக்கு நுளம்பு வலைகள்

Kogilavani   / 2014 ஜனவரி 24 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இம்மாதத்தில் பிறந்த 30 குழந்தைகளுக்கு நுளம்பு வலைகள் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் சாகவச்சேரி கிளையின் 2 ஆம் ஆண்டு நிறைவுதினத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

கிளை மண்டபத்தில் கிளை முகாமையாளர் கே.பிரதீபன் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் அபிரதம அதிதியாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் யாழ்.பிராந்திய முகாமையாளர் பா.சத்தியன் கலந்துகொண்டார்.

இதன்போது, புதிய கிளையில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .