2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

சிறுவர்களை அடித்து துன்புறுத்திய 4 பேருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

கமரா மற்றும் கையடக்கத் தொலைபேசியினை திருடியதான குற்றஞ்சாட்டில் இரு சிறுவர்களை அடித்து துன்புறுத்திய 4 பேர் இளவாளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார்.

பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 17 ஆம் திகதி கையடக்கத் தொலைபேசி, கமராவினை திருடியதாக கருதப்படும் இரு சிறுவர்களுடன் கையடக்கத் தொலைபேசியின் உரிமையாளர்  தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து சாதுரியமாக கதைத்து அவர்களை பிடித்து அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

அவர்கள் இருவரும் 13, 14 வயதுடைய சிறுவர்கள் என்பதால் அவர்களை அடித்து துன்புறுத்தியது குற்றமாக கருதப்பட்டு, அதே இடத்தினைச் சேர்ந்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியவேளை, நீதிவான் அவர்கள் 4 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிமத்ததாக அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X