Super User / 2012 ஜனவரி 02 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். குடா நாட்டில் புத்தாண்டு தினத்தில் கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் 42 பேர் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக யாழ். போதனா வைத்தியசாலை விபத்து பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க மோட்டர் சைக்கிள் விபத்துக்களில் 35 பேரும் ஏனைய வாகன விபத்துக்களில் 7 பேரும் காயமடைந்துள்ளனர். இவர்களில் எட்டு பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக யாழ். போதனா வைத்தியசாலை விபத்து பிரிவு குறிப்;பிட்டது.
அதேவேளை, விபத்துக்களில் காயமடைந்தவர்களை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கு போதிய கட்டில் வசதிகள் இல்லாமையினால் வைத்தியசாலை நிலத்தடையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலை விபத்து பிரிவு மேலும் தெரிவித்தது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago