2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இலங்கையில் 45 மில்லியன் தொலைபேசிகள் பாவனையில் உள்ளன: பி.ஏ.கிரிவெத்தெனிய

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா

இலங்கையின் மொத்த சனத்தொகை 20.48 மில்லியன். ஆனால் 45 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் பாவனையிலுள்ளதாக இலங்கை சிக்கன கடன் கூட்டுறவு சங்க சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி பி.ஏ.கிரிவெத்தெனிய வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார்.

வடமாகாண சிக்கன கடன் கூட்டுறவு சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 'சிக்கனத்துடன் மூலதனத்தை ஆரம்பிப்போம்' என்ற தொனிப்பொருளிலான 90ஆவது சர்வதேச சிக்கன தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் பொது மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (31) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் நடைபெற்ற மண் சரிவு கூட சிக்கனமற்ற தன்மையையே எடுத்து காட்டுகிறது. வெள்ளையர்கள் தொலை நோக்கு திட்டமில்லாமல் தமது தேவையை பூர்த்தி செய்வதற்காக மனிதர்களை துச்சமாக மதித்து அவர்களுடைய சக்தியை மட்டும் பெற்றுக்கொண்டார்கள்.

குச்சி வீடுகளையே அமைத்து கொடுத்து அவர்களை பாதுகாப்பற்ற இடத்தில் குடியேற்றினார்கள். அவர்களின் திட்டமிடாத செயல்களாலேயே மண் மலைகள், பாறைகள் புரண்டு இந்த நிலைக்கு காரணமாக அமைந்தது.இந்த அனர்த்தம் 300க்கு அதிகமான மக்களை காவுகொண்டுள்ளது.

எதிர்கால நலனை பார்க்காது செய்த திட்டங்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். திட்டமற்ற செயல்கள் சுற்றாடலை பாதிக்கும். சிக்கன சேமிப்பு பற்றி இன்று உலகமெங்கும் பேசப்படுகின்ற வேளையில் நாமும் சிக்கனமுள்ள புதியவர்களாக மாறவேண்டும்.

நாகரீகம் பெருமை என்று நினைத்து எம்மவர்கள் 2 வருடங்கள் பாவித்துவிட்டு தொலைபேசிகளை வீசுகிறார்கள் இதனால் சுற்றாடலை பாதிக்கிறது. அது போலவே எமது உடை அலங்கார பொருட்கள் எல்லாம் நாம் எமது தேவைக்கு அதிகமாக வாங்குகிறோம்.

யாழ்ப்பாணத்து விவசாயிகள் முன்மாதிரிகளாக செயற்படுகிறார்கள் அதை நான் நேரடியாக அவதானித்தேன். விவசாய மேட்டிலே ஒரு பொலுத்தீன், பிளாஸ்ரி பொருட்களையும் காணவில்லை. கொப்பி அடித்து வாழ்வது வாழ்வல்ல. மனிதர்களிடம் இருக்க வேண்டிய முக்கிய விடயம் சிக்கனமும் சேமிப்பும்.

எமது சுற்றாடலை சிக்கனமாக வைத்து இலாபத்தை பெற்று நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும். சிக்கனமாக வாழ்ந்தால் யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது. அடிபணிய வேண்டிய நிலை ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .