Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 மே 23 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் 47 ஆயிரத்து 300பேர் இதுவரை தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படவில்லை என்றும் அவர்கள் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
போரினால் இடம்பெயர்ந்த மக்களைக் குறிப்பிட்ட அளவில் மீளக்குடியமர்த்தி உள்ளோம். இருப்பினும் இன்னும் பெரும்பாளான மக்கள் உறவினர், நண்பர்களின் வீடுகளில் மக்கள் தங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
பிரதேச செயலக பிரிவுவாரியாக மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கும் மக்களின் விபரங்களையும் அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ளார். அவற்றின் விபரங்கள் பின்வருமாறு,
வலணைப்பிரதேச செயலகப்பிரிவு – 93 குடும்பங்கள்: 376பேர், ஊர்காவற்துறை பிரதேச செயலகப்பிரிவு – 11 குடும்பங்கள்: 41பேர், காரைநகர் பிரதேச செயலகப்பிரிவு - 114 குடும்பங்கள்: 350பேர், யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவு – 641 குடும்பங்கள்: 2,531பேர், நல்லூர் பிரதேச செயலகப்பிரிவு – 648 குடும்பங்கள்: 2,584பேர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகப்பிரிவு - 228 குடும்பங்கள்: 737பேர், சங்கானை பிரதேச செயலகப்பிரிவு - 660 குடும்பங்கள்: 2,551பேர், உடுவில் பிரதேச செயலகப்பிரிவு - 143 குடும்பங்கள்: 559 பேர், தெல்லிப்பளை பிரதேச செயலகப்பிரிவு – 6,443 குடும்பங்கள்: 29,237 பேர், கோப்பாய் பிரதேச செயலகப்பிரிவு – 211 குடும்பங்கள்: 559 பேர், சாவகச்சேரி பிரதேச செயலகப்பிரிவு 616 குடும்பங்கள்: 2,167 பேர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப்பிரிவு – 1,300 குடும்பங்கள்: 5,608 பேர்.
இந்நிலையில், மொத்தம் 11 ஆயிரத்து 108 குடும்பங்களைச் சேர்ந்த 47 ஆயிரத்து 300 பேர் இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் முகாம்களிலும் தங்கியுள்ளனர் என யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .