Kogilavani / 2011 ஏப்ரல் 28 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
புதுவருட பிறப்பை முன்னிட்டு கலாசார , விளையாட்டு நிகழ்வொன்று ஒன்று 523 ஆம் படையணியின் ஒத்துழைப்புடன் சாவகச்சேரி வர்த்தக சங்கத்தால் கடந்த திகதி திங்கட்கிழமை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது முதியோர், பெண்கள், சிறுவர் ஆகியோருக்கான விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல், சைக்கிள் ஓட்டப்போட்டி, சறுக்கு மரம் ஏறுதல், நீண்டதூர ஓட்டப்போட்டி என்பவற்றுடன் வேறு சுதேச விளையாட்டுக்களும் இடம்பெற்றன. இதில் பெருந்தொகையான மக்கள் கலந்துக்கொண்டனர்.
வெற்றி பெற்றோருக்கு, கட்டளையிடும் பொது அதிகாரி (52 ஆம் பிரிவு) பிரிகேடியர் அநுர சுத்தசிங்கவும் ஏனைய விசேட விருந்தினர்களும் பரிசில்களை வழங்கினர்.
சாவகச்சேரியின் இராணுவ உயர் அதிகாரிகளும், அரச தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
26 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
54 minute ago