Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் நத்தார் பண்டிகைத் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 56 வாகன விபத்துக்களும் 12 சீன வெடி விபத்துச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகன விபத்துக்களில் காயமடைந்த 56 பேரும் வெடி விபத்துக்களால் பாதிக்கப்பட்ட 12 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவுப் குறிப்பேட்டு புள்ளிவிபரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
யாழ். நகரப் பகுதியில் 42 வாகன விபத்துக்களும், யாழ். பருத்துத்துறையில் 3 வாகன விபத்துக்களும் மானிப்பாயில் ஒரு வாகன விபத்தும் நாவற்குளியில் 3 வாகன விபத்துக்களும் தீவகத்தில் 5 வாகன விபத்துக்களும் சாவச்சேரியில் 2 வாகன விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
6 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago