2025 மே 21, புதன்கிழமை

யாழில் 7 சதவீதமான நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணி: அரச அதிபர்

Suganthini Ratnam   / 2011 மே 25 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் இன்னும் 7 சதவீதமான நிலப்பரப்புக்களிலேயே கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் 32 சதவீத நிலப்பரப்புக்களில் கண்ணிவெடிகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உயர் பாதுகாப்பு வலயங்களாகவுள்ள பிரதேசங்களில் கண்ணிவெடி ஆபத்துக்கள் இருக்கின்றன. இதனாலேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமாகி வந்தன.

தற்போது துரிதமாக கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால், மீள்குடியேற்றம் துரிதமாக நடைபெறுகின்றன.

யாழ். குடாநாட்டில் 56 சதவீதமான நிலப்பரப்புக்களில் கண்ணிவெடி அகற்ற வேண்டிய தேவையில்லை. ஏனைய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .