Suganthini Ratnam / 2011 ஜனவரி 05 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்கின்ற கொலை, கொள்ளை மற்றும் காணாமல்போதல் போன்ற குற்றச்செயல்களை கண்டறிவதற்கான விசேட உயர்மட்ட மாநாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
யாழ். மாவட்டத்தில் பொலிஸார் உரிய முறையில் கடமையாற்றவில்லையென்பதுடன், அவர்கள் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இலஞ்சத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுகின்றார்களென யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையிலேயே, நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். அரச செயலகத்தால் இவ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
யாழ். பொலிஸ் உயரதிகாரிகளுக்கு பொதுமக்களுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 3 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் இந்த மகாநாடு நடைபெறவுள்ளதாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
இதன்போது, யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற கொலை, கொள்ளை, காணாமல்போதல்; போன்றன உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக மக்களின் விசாரணைகளுக்கு பொலிஸ் உயரதிகாரிகள் பதிலளிப்பரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் பொலிஸ் உயரதிகாரிகளிடம் விளக்கங்களை பொதுமக்கள் நேரில் பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ். குடாநாட்டில் சட்டம், ஒழுங்கைப் பேணுவதற்கு பொதுமக்களினதும் பொது அமைப்புகளினதும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக சிவில் சமூக அமைப்புக்கள் பொது அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளையும் கலந்து கொள்ளுமாறும் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025