2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 74 பேரும் விடுவிப்பு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  செல்வநாயகம் கபிலன், யோ.வித்தியா

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தின் தீவகக் கடற்பரப்புக்களில் வைத்துக் கைது செய்யப்பட்ட 69 மீனவர்களும், படகின்றி நீந்திக் கரை சேர்ந்த 5 மீனவர்களுமாக மொத்தம் 74 மீனவர்கள் வியாழக்கிழமை (14) யாழ்.நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நல்லெண்ண அடிப்படையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரிலேயே மேற்படி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜுலை 22 ஆம் திகதி எழுவைதீவுக் கடற்பரப்பில் வைத்து 5 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் ஊர்;காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் வியாழக்கிழமை (14) விடுவித்தார்.

அத்துடன், யாழ்.நயினாதீவுக் கடற்கரையில் ஜுலை மாதம் 17 ஆம் திகதி கரையொதுங்கிய ஐந்து பேரையும் இதன்போது, நீதவான் விடுவித்தார்.

அதேபோல், ஜுலை மாதம் 29 ஆம் திகதி நெடுந்தீவிற்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து 7 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 51 இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பொன்னம்பலம் குமாரசாமி வியாழக்கிழமை (14) விடுவித்தார்.

ஆனால், 69 மீனவர்களின் 12 படகுகளும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் தொடர்ந்து தடுத்து வைக்கும்படி நீதவான்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இதனையடுத்து, மேற்படி மீனவர்கள் யாழ். இந்தியத் துணைத்தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேற்படி மீனவர்களை, இலங்கை கடற்படையினர் ஊடாக சனிக்கிழமை (16) இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என யாழ். இந்தியத் துணைத்தூதரக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X