2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வடமராட்சிக் கடலில் யாழ் மீனவர்களால் 90 இந்திய மீனவர்கள் சுற்றிவளைப்பு

Super User   / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி, கர்ணன்)

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய இழுவைப் படகுகளும் அவற்றிலிருந்த 90 மீனவர்களும் வடமராட்சி கடற்றொழிலாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டு வடமராட்சி கரைக்கு கொண்வரப்பட்டுள்ளனர்.

வடமராட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்தப் படகுகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இம்மீனவர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வடமராட்சிக் கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள இந்திய மீன்பிடிப் படகுகளின் நடமாட்டம் தொடர்பாக மீனவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கிய நிலையில் இன்றைய தினம் உள்ளுர் மீனவர்கள் இந்திய மீனவப் படகுகளை சுற்றிவளைத்துள்ளனர்.


  Comments - 0

  • mahsmali Wednesday, 16 February 2011 11:17 PM

    How seeman going to react for this? If it's wrong by indians then?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X