Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
அளவுக்கதிகமான மதுபோதை காரணமாக குருநகர் தொடர்மாடியில் இருந்து வீழந்து குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை (04) இரவு உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் மரியதாஸ் பிங்ரன் (வயது 33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் மடுவுக்கு சென்றுள்ளனர்.
இந் நிலையில் அதிக மதுபானம் அருந்திய இவர் 40 அடி உயரம் உள்ள நான்காவது மாடியின் பின் பக்கமாக குதித்துள்ளதாக சம்பவத்தை கண்டவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர்.
அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தினால், அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது என மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மரணவிசாரணையினை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago