2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'அதிகாரிகளுக்கு நல்லிணக்கம் இல்லை'

George   / 2017 ஜனவரி 19 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

“கீரிமலையில் பகுதியில் மீள்குடியேற்றம் செய்துவைக்கப்பட்ட நல்லிணக்கபுரம் பகுதி மக்களுக்கு இதுவரை காணி உறுதிகள் வழங்கி வைக்கப்படவில்லை”  என மீள்குடியேறிய மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன், இராணுவத்தின் மனிதவலுவுடனும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அருகில் காணப்பட்ட அரச காணியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் 100 குடும்பங்களுக்கு காணியுடன் வீடு வழங்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி, கடந்த வருடம் விஜயம் செய்த போது வீடுகளை பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார்.

ஆனால், மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும், உரிய அதிகாரிகள் இது வரைகாணி உறுதியினை வழங்கவில்லை என மீள்குடியமர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

வழங்கப்பட்ட காணியில் சிறுபெட்டிக்கடை போட்டு வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு அனுமதி கேட்டால் இந்தக்காணி இன்னும் உங்களுக்கு சொந்தமில்லை உறுதி வழங்கிய பின்னர் தான் கடை மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வேலைகளை செய்ய முடியும் என தெல்லிப்பழை பிரதேசச் செயலக அதிகாரிகள் தெரிவிப்பதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்டு வழங்கப்பட்ட முதல் ஆவணத்தில், “வழங்கப்பட்ட வீடும் நிலமும் இவ் ஆதனப்படி இன்றுமுதல் உங்களுக்கு உரித்தாகும். தாங்களும் இந்த நிலத்துக்கு உரித்தானவர்களும் சொந்த ஆதனமாக ஆண்டு அனுபவிக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள், கடைகள் அமைப்பதற்கும், மதில் கட்டுவதற்கும் தடைவிதிப்பதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X