2025 ஜூலை 23, புதன்கிழமை

'அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்களை கண்டிக்கின்றோம்'

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

காணாமல் போன உறவினர்களுக்கு உதவித்திட்டங்களை வழங்குவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

காணாமல் போனவர்களை  கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற போதும் காணாமல் போன தமது  உறவுகள் எப்படியாவது கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் சாட்சியமளித்து வருகின்றனர்.

எனினும் அவர்களின் நம்பிக்கைக்கு எதிரான விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் காணாமல் போனவர்களுக்கான மரணச்சான்றிதலை பெற்றுக்கொள்ளுமாறும் அதனை தொடர்ந்து வீட்டுத்திட்டம்,சமுர்த்தி,கோழி வளர்ப்பு போன்ற உதவிகளை பெற்றுத்தருவதாக அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சாட்சியாளர்களை குழப்பும் வகையில் விசாரணைகள் மேற்கொண்டு வரும் அதிகாரிகள் உதவித்திட்டங்களை வழங்குவதாக கூறுவதை காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

எனவே காணாமல் போன,கடத்தப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன? அவர்கள் எங்கிருக்கின்றார்கள்? அவர்களின் மீட்பு ஆகியவையே தற்போது அந்த உறவுகளுக்கு தேவை.அதற்கு மாறாக அவர்கள் எவ்வித உதவித்திட்டங்களையும் அரசாங்கத்திடம் கேட்கவில்லை.

எனவே காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது மக்களின் சாட்சியங்களுக்கு எதிராக அவர்களை குழப்பும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் நடந்து கொள்ளக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .