2025 ஜூலை 23, புதன்கிழமை

'அனுரவின் கருத்து வரவேற்கத்தக்கது'

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளது அமைப்பு மீண்டும் தலைதூக்க முடியாது என்று கூறினாலும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் அந்த நிலைமை உருவாகலாம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்திருக்கும் கருத்து வரவேற்கத்தக்கது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

காணாமற் போனோரைக் கண்டறிதல், அரசியல் கைதிகளின் விடுதலை, எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கம் துரித கதியில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

 ஈ. பி. டி. பி.யினராகிய நாமும் இதையே அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய மேற்படி பிரச்சினைகள் இன்று மக்கள் பிரச்சினைகளாக பூதாகாரமாக உருவெடுத்துள்ளன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.

உரிய காலத்தில் தீர்வுகள் எட்டப்படாமல் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகள் இழுபறி நிலையை அடைந்துவிட்டால் அது நாட்டின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. அத்துடன், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் அரசின் நடவடிக்கைகளுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுக்காது.

எனவே, இவ் விடயங்களில் அரசாங்கம் உடனடி அவதானம் செலுத்தி தீர்வுகளைக் காண முன்வர வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .