Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜெகநாதன்
தனியார் ஊழியர்கள் 8 மணித்தியாலங்கள் பணியாற்றுவதைப் போல, வட மாகாண சபையின் கீழுள்ள அரசாங்க ஊழியர்களும் 8 மணித்தியாலங்கள் பணியாற்றுவதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்த வேண்டும். சில உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரிகள் தமது பணியின் இடைநடுவில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அளவுக்கு நிலைமையுள்ளதாக வட மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார்.
வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முதலமைச்சரின் கீழான அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று புதன்கிழமை (16) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.
உள்ளூராட்சி மன்றங்கள் வினைத்திறனற்று இருக்கின்றன. அவற்றை வினைத்திறனாக செயற்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நெல்சிப் திட்ட மோசடி தொடர்பில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு தொடர்பான விடயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
மேலும்,யாழ்ப்பாணத்தின் மரியாதையைக் கெடுக்கும் வகையில் துர்நாற்றம் நிறைந்ததாக காணப்படும் பண்ணை பஸ் நிலையத்தை சீர் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
8 minute ago
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
2 hours ago
3 hours ago