Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
ஆயுதமேந்தி போராடிய தமிழ் இயக்கங்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது? என வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச சபையின் முன்னாள் துணை தவிசாளர் சண்முகலிங்கம் சஜீவன் கேள்வியெழுப்பினார்.
இது தொடர்பில் அவர், வெள்ளிக்கிழமை (13) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதால் அவர்களின் சிறை வாழ்க்கை முடிந்துவிட போவதில்லை. அவர்கள் 10 தொடக்கம் 20 வருடங்கள் வரையில் சிறையில் பல துன்பங்களை சித்திரவதைகளை அனுபவித்தவர்கள்.
பெரும்பாலான கைதிகள் மீதுள்ள வழக்குகள் அரச தரப்பால் அளவுக்கு அதிகமாக சோடிக்கப்பட்டவை. பிணையில் வந்த பின்பு வழக்குகள் நடந்து கொண்டுதான் இருக்கும். நீதிபதிகளும், சட்டத்தரணிகளும், வழக்கு நடக்கும் இடமும் எமக்கானது இல்லை. வழக்கின் முடிவில் குற்றவாளிகளாக அறிவிக்கும் நிலைமை ஏற்படலாம். ஒரு நாள் வழக்கு தவணைக்கு போகவிட்டலும் (சுகயீனம்காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காக) கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்கபடும் சூழல் ஏற்படும்
1971 ஆம் ஆண்டு தொடக்கம் 1989 ஆம் ஆண்டு வரை கிளர்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி க்கு பொது மன்னிப்பு வழங்கபட்டுள்ளது. அதேபோன்று ஆயுதமேந்தி போராடிய தமிழ் இயக்கங்களுக்கு 1987 ஆம் ஆண்டில் பொதுமன்னிப்பு வழங்க முடியும் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கமுடியாது?.
தமிழ் அரசியல் தலைமைகள் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிதல் ஆகிய மூன்று விடயங்களுக்கும் உடனடி தீர்வினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். அதனை அரசாங்கம் தட்டிக்கழிக்குமானால், தங்கள் பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து போராட முன்வர வேண்டும். மக்கள் போராட்டத்தின் மூலம் தான் உரிமைகளை வென்றெடுக்க முடியும் இவ்வாறு அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Jul 2025