2025 ஜூலை 23, புதன்கிழமை

'இந்த அரசாங்கம் எங்களுடையது அல்ல'

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

தற்போதுள்ள அரசாங்கத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாகவே உள்ளோம். நாங்கள் அரசாங்கத்தின் அங்கம் இல்லையென வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று வியாழக்கிழமைவடமாகாண சபையில் நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா அடிக்கடி, உங்கள் அரசாங்கம் என்ற வார்த்தையை எங்களை நோக்கிப் பயன்படுத்துகின்றார். நாங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்து எதிர்க்கட்சியாகவே நாடாளுமன்றத்தில் இருக்கின்றோம். தவிர அரசாங்கத்தின் அங்கமாக இல்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .