2025 ஜூலை 19, சனிக்கிழமை

இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய வீடுகள் நல்ல நிலையில்

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய வீடுகள் மிகவும் நல்ல நிலையில் காணப்படுகின்றன.

அவ்வாறான வீடுகளின் சொந்தக்காரர்கள் அந்த வீடுகளை உடனடியாக தங்களின் மீள்குடியேற்றத்துக்கு பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.

25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில் வலிகாமம் வடக்கில் 468.5 ஏக்கர் காணிகளும், வலிகாமம் கிழக்கில் 233 ஏக்கர் காணிகளும் கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட காணிகளில் பெரும்பாலான காணிகளில் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இராணுவ முகாம்களாக பயன்படுத்தப்பட்ட வீடுகள் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும் அவை திருத்த வேண்டிய நிலையிலுள்ளன.

ஆனால், இராணுவ உயர் அதிகாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் வீடுகள் மிகவும் நல்ல நிலையில் காணப்படுகின்றன. அந்த வீடுகளை உடனடியாக மக்கள் மீள்குடியேற்றத்துக்கு பயன்படுத்தக்கூடிய நிலையும் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X