2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'இராணுவத்தினர் உபயோகப்படுத்தி வருகின்ற கேப்பாப்பிலவு வீதியை திறக்க வேண்டும்'

Niroshini   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தினர் உபயோகப்படுத்தி வருகின்ற வற்றாப்பளை கேப்பாப்பிலவு வீதி புனரமைப்பு தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மீள்குடியியேற்றம் இடம்பெற்று ஆறு வருடங்கள் கடந்தும், மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படாது இராணுவத்தினர் மாத்திரம் பயன்படுத்திவருகின்ற புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாப்பிலவினூடாக வற்றாப்பளை செல்கின்ற மூன்று கிலோ மீற்றர் வரையான வீதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் புனரமைக்கப்படவுள்ளது.

இவ்வீதியானது மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாத நிலையில், இப்பகுதி மக்கள், தமது போக்குவரத்துத் தேவைகளுக்காக தூரம் கூடிய, செப்பனிடப்படாத, இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள மாற்று வழியையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் காப்பெட்  வீதியாக தரமுயர்த்தப்படவுள்ள வற்றாப்பளையில் இருந்து கேப்பாப்பிலவு வரையான வீதி புனரமைக்கப்பட்டதன் பின்பு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டு பொதுமக்களின் சுமூகமான போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட வேண்டும்.

மேலும், கேப்பாப்பிலவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள், பாடசாலை, பொதுமண்டபம், கோயில்கள், வீதிகள் என்பனவற்றை உள்ளடக்கியதாக காணப்படும் பெருமளவான நிலப்பரப்புக்களும் விடுவிக்கப்பட்டு எம் மக்கள் தமது சொந்த நிலங்களில் இயல்பு வாழ்க்கை வாழ வழியேற்படுத்தப்படவேண்டும்.

எமது மக்களின் காணிகளும் நிலங்களும் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்குள் தொடர்ச்சியாக இருந்து வரும் நிலையானது நல்லாட்சி அரசுக்கோட்பாட்டுக்கு எதிர்மறையான இயல்புகளையே வெளிப்படுத்துகின்றது. இந்நிலையானது தமிழ் மக்களின் மனங்களில் இவ்வரசாங்கம் மீதான அதிருப்தி அலைகளினை தோற்றுவித்துள்ளது.
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X