2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'இரு மகன்களையும் தொலைத்துவிட்டேன்'

Menaka Mookandi   / 2016 மார்ச் 01 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'இராணுவ சுற்றிவளைப்பின் போது ஒரு மகனையும், இந்தியாவுக்குச் சென்ற இன்னொரு மகனையும் இழந்து வருந்துகின்றேன்' என தச்சந்தோப்பைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற தாயார், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் கண்ணீர் வடித்தார்.

சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற சாட்சியப் பதிவின் போது, அவர் மேலும் கூறியதாவது,

'1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதியன்று, தச்சந்தோப்புப் பகுதியில் இடம்பெற்ற இராணுவச் சுற்றிவளைப்பில் 200பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரணை செய்துவிட்டு, 24 பேரைத் தடுத்து வைத்திருந்ததுடன், எஞ்சியோரை விடுதலை செய்தனர். 24 பேரில் எனது மகனும் இருந்தார். அதன் பின்னர் மகன் பற்றிய எந்தத் தகவலும் இன்றுவரையில் இல்லை.

எனது 2ஆவது மகன் திருக்குமரன், கடல்வழியாக இந்தியா செல்வதற்காக கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி சென்றார். அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் இன்றுவரையில் தெரியாது' எனக்கூறி அந்த தாய் கதறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X