2025 ஜூலை 17, வியாழக்கிழமை

'இலங்கை பௌத்த சிங்கள நாடாக மாறுகின்றதோ எனப் பயப்பிடுகின்றோம்'

Kogilavani   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'இலங்கை, பல்தேசிய மத, இன, கலாசாரம் கொண்ட ஒரு நாடு. இவ்வாறு இருக்க தற்போது நாடு பௌத்த, சிங்கள நாடாக மாறுகின்றதோ என நாங்கள் பயந்துள்ளோம். இது மாற்றப்படவேண்டும் என சின்மயாமிசன் வதிவிட ஆச்சரியார் பிரமச்சாரி ஜாக்கிரத சைத்தன்யா தெரிவித்தார்.

இலங்கை அரசியலமைப்பில் மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களுடைய கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் குழுவின் அமர்வு இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை (16) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பரிந்துரைகளை கூறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில்,

'சமாதானத்தை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் என 8 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட மக்களின் கருத்துக்களின் ஆவணங்களை இந்தக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம்.

தமிழ் மக்களின் பிரச்சினையான காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமற்போனோரைக் கண்டறிதல் ஆகியவற்றை அரசாங்கம் செய்தால் தான், இந்த நல்லாட்சி எனப்படும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X