2025 ஜூலை 19, சனிக்கிழமை

இலவச மருத்துவ பரிசோதனை

Niroshini   / 2016 ஜனவரி 06 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் பொதுநோக்கு மண்டபத்தில்  வெள்ளிக்கிழமை(08) காலை 10 மணிக்கு முதியோர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளது.

ஊற்றுப்புலம் கிராம முதியோர் சங்கத்தின் தலைவர் நா.சின்னையா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மருத்துவர்கள் கலந்துகொண்டு முதியோர்களுக்கு தேவையான மருத்துவ சேவையினை வழங்கவுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 22ஆம் திகதி காலை 10 மணிக்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கிராம முதியோர் சங்கத்திலும் இலவச மருத்துவ பரிசோதனை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X