2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'இவ்வருடத்துக்குள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்'

George   / 2017 ஜனவரி 26 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்சன்

தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் 2017 ஆம் ஆண்டுக்குள் தீர்க்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம், யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டபோது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டு மக்கள் மத்தியில் ஒர் உண்மையான புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஏற்பட்டு நாட்டில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுவதாக இருந்தால் அந்த சமாதானம் சமத்துவத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

சமத்துவம் ஏற்படுவதாக இருந்தால் இறைமையின் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்தந்த பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்கள் அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்கின்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

இவை, இந்த வருடத்துக்குள், அதாவது 2017 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X