2025 ஜூலை 23, புதன்கிழமை

'உறுப்பினர்கள் ஒதுக்கிய நிதியை மக்களிடம் கொண்டு செல்வதில்லை'

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

வடமாகாண சபையிலுள்ள பல உறுப்பினர்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 மில்லியன் ரூபாய் நிதியை திட்டங்களுக்கு உரிய காலத்தில் சமர்ப்பிப்பதில்லை. முதலில் 6 மில்லியன் ரூபாய் நிதியை மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். அதன்பின்னர் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை 10 மில்லியனாக அதிகரிப்பது தொடர்பில் சிந்திக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் காட்டமாக தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (15) முதல் நடைபெற்று வருகின்றது. இதில் முதலமைச்சரின் கீழான அமைச்சுக்களின் நிதிப்பயன்பாடு தொடர்பான விவாதம் புதன்கிழமை (16) நடைபெற்றது.

'உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 மில்லியன் ரூபாய் நிதியை 10 மில்லியனாக உயர்த்துமாறு, உறுப்பினர் தர்மபால செனவிரட்ண விடுத்த கோரிக்கையை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்'

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர்,

'அந்த நிதியை தற்போதைக்கு உயர்த்த முடியாது. அதற்கான காரணங்களை நாம் பின்னர் தெரியப்படுத்துவோம். தற்போது மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 6 மில்லியன் ரூபாய்க்கான திட்டங்களையே பல மாகாண சபை உறுப்பினர்கள் உரிய காலத்துக்குள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. முதலில் அதனைக் கொண்டு செல்லுங்கள் அதன் பிறகு அதிகரித்த நிதி தொடர்பில் முடிவெடுக்கலாம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .