2025 ஜூலை 23, புதன்கிழமை

'உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புங்கள்'

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

கழிவகற்றல் தொடர்பில் புதிய தொழில்நுட்ப முறைகளை அறிந்துகொள்ளும் வகையில் வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி கற்பதற்கான வழி வகைகளை வட மாகாண முதமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று புதன்கிழமை (16)  வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட விவாதத்தின் முதலமைச்சரின் அமைச்சுக்கான நிதிப்பயன்பாடு தொடர்பான விவாதம் சபையில் இடம்பெற்றுது.இதன்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கழிவகற்றல் என்பது வட மாகாணத்தில் அதிலும் யாழ்;ப்பாணத்தில் பெரும் பிரச்சினையாகவுள்ளது. கல்லுண்டாய் வெளியில் கொட்டப்படும் குப்பைகளால் நவாலி, பொம்மைவெளி பிரேதச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.இதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு மேற்படி திட்டத்தைக் கையாளவேண்டும் என்றார்.

மேலும், சுற்றுலாத்துறையை மேம்படுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்;ந்த இடங்களைப் பாதுகாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை,திணைக்களங்கள், சபைகளில் வேலையில்லாமல் இருக்கும் முகாமைத்துவ உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .