2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'எனது குடும்பத்தை நல்லாட்சி அரசாங்கம் கொடுமைப்படுத்துகின்றது'

Niroshini   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லப்படும் இந்த அரசாங்கத்தின் காலத்தில் எனது குடும்பத்தை பொலிஸார் எனக்கூறி வருபவர்கள் தொல்லைப்படுத்தி வருவதாக அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

நான் யாழ்ப்பாணத்தில் மக்களுடன் மக்களாக இருக்கின்றேன். இந்நிலையில், கொழும்பிலுள்ள எனது குடும்பத்தை இலக்கத்தகடற்ற வாகனத்தில் செல்லும் பொலிஸார் துன்புறுத்தி வருகின்றனர். முன்னர் எனது மகனைக் கடத்தி என்னைப் பற்றி விசாரித்தனர். நான் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறி விசாரணை நடத்தினர். மகன் விடுவிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்தும் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் எனக்கூறியவர் எனது குடும்பத்தை துன்புறுத்தி வருகின்றனர்.

கொழும்பு, சோனகர் தெருவில் அமைந்துள்ள எனது அலுவலகத்தில் பணியாற்றிய எனது முகாமையாளரை கடந்த நவம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் காணவில்லை. இலக்கதகடற்ற வாகனத்தில் வந்தவர்களே அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதுடன், பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட பலருக்கு முறைப்பாட்டு கடிதங்களும் அனுப்பியுள்ளேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X