2025 ஜூலை 16, புதன்கிழமை

'எனது கணவர் பூசாவில் இருந்தமை உறுதி'

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

படுகாயமடைந்து காணாமற்போன எனது கணவர் பூசா தடுப்பு முகாமில் இருப்பதாக அந்த முகாமில் இருந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுத வந்தவர்கள் தனக்குக் கூறியதாக விடுதலைப் புலிகளின் இராத படையணியைச் சேர்ந்த மூர்த்தி சந்திரபோஸ் எனப்படும் அன்பனின் மனைவி தர்சினி என்பவர் கூறினார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

புலிகளின் இராதா படையணியில் இருந்த கணவர், 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி படுகாயமடைந்த நிலையில், இராணுவச் சுற்றிவளைப்பில் அகப்பட்டு காணாமற்போனார். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்காக பூசா முகாமில் இருந்து வந்தவர்களிடம் எனது கணவரின் புகைப்படத்தைக் காண்பித்து தெரியுமா எனக்கேட்டேன். தங்களுடன் இருக்கின்றார் என்றனர். நான் பூசா முகாமுக்குச் சென்று கேட்டபோது, அவ்வாறு ஒருத்தர் அங்கு இல்லையெனக் கூறப்பட்டது.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 பேர் எமது வீட்டுக்கு வந்தனர். 4 ஆம் மாடியிலிருந்து வந்தவர்கள் என தங்களை அடையாளப்படுத்திய அவர்கள், கணவர் உயிருடன் இருப்பதாக சொன்னதுடன், விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறிச் சென்றனர். அதன்பின்னர் கணவர் பற்றி எவ்வித தகவல்களும் இல்லை என்றார்.

இதேவேளை,எனது தங்கையின் கணவரான முன்னாள் போராளி இராகமணி நிமலநாதன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி, வட்டுவாகலில் இராணுவத்தினரால் தனியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டோம்.

அவரை எங்களுடன் விடுவிப்பதாக கேட்டபோது, 'கெதியா ஓடுங்கள் இல்லையென்றால் உங்களையும் பிடிக்க வேண்டி வரும்' என இராணுவத்தினர் கூறினர். அவர் தொடர்பிலும் இன்று வரையில் எவ்வித தகவலும் இல்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X