Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் கட்டடத் தொகுதியின் சுவர் ஒன்றில் காணாமற்போன எனது மகனுடைய பெயர் எழுதிய கையெழுத்து காணப்படுவதாக தாயார் ஒருவர் கூறினார்.
காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் சாட்சியமளித்த தாயார் ஒருவர் இவ்வாறு கூறினார்.
எனது மகன் தங்கவேல் கிருபாகரன் கடைக்குச் இறுவட்டு வாங்கச் சென்ற வேளையில், கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி காணாமற்போனார். மகன் காணாமற்போவதற்கு 19 நாட்களுக்கு முன்னர் மகனின் அடையாள அட்டையைப் பறித்த இராணுவத்தினர் மீண்டும் அவனிடம் வழங்கினர். கொழும்பு செல்வதற்காக கிளியரன்ஸ் எடுப்பதற்கு மகன் பதிவு செய்திருந்தார். அதன் பின்னரே காணாமற்போனார்.
இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் விடுவிக்கப்பட்டது. இதனை முன்னைய ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி சென்று பார்வையிட்டார்.
அங்குள்ள சுவர் ஒன்றில் ரி.கிருபாகரன் என எழுதப்பட்டிருந்தது. அது என்னுடைய மகனுடைய கையெழுத்து. எனது மகன் கடத்தப்பட்டு, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். அதன்போதே அவர் அங்கு தனது பெயரை எழுதி வைத்திருக்க வேண்டும்' என்றார்.
21 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago