2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

'கூட்டாட்சியால் மதிப்பு கூடியுள்ளது'

George   / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன், கே.மகா

“ஒன்றிணைந்த கூட்டாட்சியால், வெளிநாடுகளில் எமது மதிப்பு உயர்ந்துள்ளது” என  கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்தார்.

வலி. வடக்கு, தெல்லிப்பழை கலாசார மத்திய நிலையத் திறப்ப விழா நிகழ்வில் சனிக்கிழமை, கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இந்தக் கலாசார மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகள் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டன. தற்போதுள்ள ஆட்சியின் கீழ், அடிக்கல் நாட்டப்படும் அனைத்து வேலைத்திட்டங்களும் ஆரம்பித்து ஒரு வருடத்துக்கள் நிறைவடையும். எமது ஆட்சியின் கீழ் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவின் கீழ், கலாசார மத்திய நிலையங்களை அமைக்க உள்ளோம்.

யாழ். மாவட்டத்தில், சவகச்சேரி கலாசார மத்திய நிலையம், கரவெட்டி பிரதேச கலாசார மத்திய நிலையம்,  சண்டிலிப்பாய் பிரதேச கலாசார மத்திய நிலையம் ஆகியன, மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் திறந்து வைப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். கலாசாரம் என்பது இந் நாட்டிலே வேறுபாடு இல்லை. கலாசாரம் என்பது இந்நாட்டின் ஒருமைப்பாடு.

இந் நாட்டின் அனைத்து இனங்களும் ஒன்றாக வாழவேண்டும். கடந்த காலங்களை விட தற்போது பாரிய மாற்றம் அடைந்து வருகின்றது. கடந்த காலத்தில் உலகளாவிய ரீதியில் எமது நாட்டிற்கு நன்மதிப்பு இருக்கவில்லை. இந்நிலை தற்போது மாற்றமடைந்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் ஒற்றுமையாக ஆட்சி நடாத்துவது தான் இதற்கு காரணம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X