2025 ஜூலை 21, திங்கட்கிழமை

'கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை உடனடியாக கூட்டுக'

Niroshini   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.றொசேரியன் லெம்பேட்

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை காரணமாக ஏற்பட்டிருக்கும் நிலைமையை ஆராய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை உடனடியாக கூட்டுமாறு கூட்டமைப்பின்; தலைவரும்  எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஈழ விடுலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர், திங்கட்கிழமை(28) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நிகழ்ந்த அத்தனை நாடாளுமன்ற,மாகாண சபை,உள்ளூராட்சி தேர்தல்களிலும் தமிழ் மக்களின் அமோக ஆதரவை பெற்று வந்திருக்கிறது.

தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை காப்பதிலும் அதனை மேலும் பலப்படுத்துவதிலும் நாம் தீவிர அக்கறையும் ஈடுபாடும் கொண்டுள்ளோம்.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை காரணமாக ஏற்பட்டிருக்கும் நிலைமையை ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை உடனடியாக கூட்டுமாறு அதன் தலைவரான சம்மந்தனிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம். அவரும் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் கலந்துகொண்டு விவாதித்து உகந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X