2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'கூட்டமைப்பில் இருந்திருந்தால் பேரவைக்கு ஆதரவு தெரிவித்திருப்பேன்'

Niroshini   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்தால், தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு தெரிவித்திருப்பேன். ஏனெனில், கூட்டமைப்பில் எனக்கு இடமிருந்திருக்காது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

மக்களிடம் அதிக ஆதரவு பெற்றவர்கள் கூட்டமைப்பினர். அதிலிருந்து முரண்பட்டவர்களே இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளனர் என எனக்குத் தோன்றுகின்றது.

மாகாண சபை என்ற வரப்பிரசாதம் கூட்டமைப்பின் கையில் இருக்கும் போது, அதன்மூலம் நிறைய செய்திருக்க முடியும். அதைவிடுத்து ஏன் இந்த அமைப்பை ஆரம்பித்தார்கள் என்பது தொடர்பில் ஆராய வேண்டும். வடமாகாண சபையின் திறன்மிக்க அதிகாரிகளை கொண்டு நடத்தக்கூடியவர்களாக வடமாகாண சபை அரசியல்வாதிகள் இல்லை என்றார்.

மேலும்,பத்தோடு பதினொன்றாக இருப்பதற்கு நான் தாயார் இல்லை. அதனாலேயே எனக்கென்று ஒரு கட்சி அமைத்து நான் செயற்பட்டு வருகின்றேன். எதிர்காலத்தில் இந்த அமைப்புச் சரியாகச் செயற்பட்டால், அது தொடர்பில் சிந்திக்க முடியும். இந்த அமைப்பின் ஆரம்பமும் ஓர் அரசியல் செயற்பாடு ஆகும். இந்த அமைப்பானது பிழையாகிவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X