2025 ஜூலை 16, புதன்கிழமை

'15,682 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் தேவை'

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியேறியுள்ள குடும்பங்களில் 15,682 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் தேவையாகவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு,மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 41,322 குடும்பங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 31 ஆயிரத்து 733 பேர் மீள்குடியேறியுள்ளனர்.

மீளக்குடியேறி மக்களுக்கு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் நிரந்தர வீடுகள் அமைத்தல், பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் புனரமைத்தல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், மீள்குடியேறிய மக்களின் வீட்டுத் தேவைகள் படிப்படியாக நிறைவு செய்யப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில்,முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையில், 19,565 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 3,418 குடும்பங்களுக்கு பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்னமும் 15,682 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் தேவையாகவுள்ளதுடன், மேலும்,2,657 குடும்பங்களுக்கு வீடுகள் புனரமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X