Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 06 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் காணிகள் பல படையினரின் வசம் இருப்பதனாலும் வெடி பொருட்கள் அகற்றப்படாமையினாலும் மீள்குடியேற பதிவுகளை மேற்கொண்டுள்ள 748 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற முடியாத நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து, தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்வுக்கு இதுவரை பதிவை மேற்கொண்டுள்ள குடும்பங்களின் காணிகள், வீடுகள் தொடர்ந்தும் படையினர் வசமுள்ளதால் அவற்றைப் பெற்று, தங்களை தமது சொந்த இடங்களில் குடியமர்த்துமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கட்பட்ட மட்டுவில் நாடு கிழக்கு பகுதியில் 6 வீடுகளும் மட்டுவில் நாடு மேற்கு பகுதியில் 4 வீடுகளும் பொலிஸாரின் பயன்பாட்டிலும் இரணைதீவு பகுதியில் 336 குடும்பங்களின் காணிகள் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலும் இருப்பதனால், பூநகரி பிரதேசத்தில் 346 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ளன.
கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் சிவிற்சென்ரர், கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சி நகரம், கிருஸ்ணபுரம், மாவடியம்;மன், இராமநாதபுரம், திருவையாறு, திருவையாறு மேற்கு, உருத்திரபுரம் கிழக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 129 குடும்பங்களின் காணிகள் படையினரின் வசமுள்ளன.
இதேவேளை, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கட்பட்ட ஆனையிறவு, குமரபுரம், பரந்தன், பெரியகுளம், புளியம்பொக்கணை, புன்னைநீராவி, தர்மபுரம், ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 16 குடும்பங்களின் காணிகள் படையினரின் வசமுள்ளன.
அத்துடன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில், முகமாலை, வேம்பொடுகேணி, ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றும் பணிநிறைவு பெறாததால் 257 குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .