2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'காணி சுவீகரிக்க முயல்வது நல்லாட்சியின் ஜனநாயக விரோத செயல்'

Gavitha   / 2016 ஜனவரி 03 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படையினருக்காக காணி சுவீகரிக்க முயல்வது, நல்லாட்சிக் காலத்தில் நடைபெறுகின்ற ஜனநாயக விரோத செயலென வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமாகிய மருத்துவர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலகத்துக்கு சனிக்கிழமை (02) விஜயம் செய்து, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரிடம் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'கடந்த முப்பதாண்டுகளாக போரினால் தங்களுடைய காணிகளுக்குள் செல்ல முடியாத நிலையிலேயே மேற்படி கிராமமக்கள் இருந்தனர். போர் நிறைவுக்கு வந்தபின்னர், கடற்படையினர் 617 ஏக்கரையும்  முள்வேலியமைத்து படைத்தளம் அமைத்துள்ளனர். தற்போது நல்லாட்சிக்கான காலத்தில் தமிழ் மக்களின் பூர்வீகக்காணியை  கடற்படையினருக்காக சுவீகரிக்க முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாது' என்று அவர் இதன்போது கூறினார்.

அவ்வாறான சுவீகரிப்பு முயற்சிகள் நடைபெறுமானால், முல்லைத்தீவு மக்கள் அகிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுத்து செல்லவேண்டிய நிலையேற்படும். வட்டுவாகல் பகுதி சுற்றுலா மையப்பகுதியாகும். அவ்வாறான பகுதியில் கடற்படையினருடைய தளம் அகற்றப்படவேண்டுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X